சி.பி.ஐ.எம். சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
பீகார் மாதேபுரா பகுதியின் சி.பி.ஐ.எம். மூத்த தலைவரான ராஜேஷ் ஹன்ஸ்தாவை சுட்டுக் கொன்று 2 மாதங்கள் ஆகியும் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் பீகார் காவல்துறை அலட்சியமாக செயல்பட்டு வருவதைக் கண்டித்து மாதேபுராவில் சி.பி.ஐ.எம். சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மாநில செயலாளர் லாலன் சவுத்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.