புவனகிரி அருகே கோயில் உண்டி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது இக்கோயிலில் கோவில் நிர்வாகியான கஸ்தூரி என்பவர் தினமும் பூஜை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக காலை கோவிலை திறந்த போது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து வெளியூர் சென்று இருந்த தனது மகனான கோவில் தர்மகர்த்தா சண்முகத்திடம் தெரிவித்தார் பின்னர் ஊர் திரும்பிய சண்முகம் கோவிலை சென்று பார்க்கையில் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் சுமார் 12000 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருதூர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு.கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.