சென்னையில் இருந்து,கோவை, ஈரோடு, திருப்பூர் வழியாக வந்தே பாரத் ரயில்.*
*கட்டணம் எவ்வளவு? – முழு விவரம்*
கோவை – சென்னை – (CC) ரூ. 1,215 / (EC) 2,310.
திருப்பூர் – சென்னை – (CC) ரூ. 1,130 / (EC) 2,145.
ஈரோடு – சென்னை – (CC) ரூ. 1,055 / (EC) 1,995.
சேலம் – சென்னை (CC) ரூ.970 / (EC) 1,805.
அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ.,
கோவை-சென்னை இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடங்கப்படுகிறது. பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில் இரவு 10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்திற்கு வருகிறது,
மறுநாள் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரெயில் (ரெயில் எண்:20644) புறப்படுகிறது.
காலை 6.35 மணிக்கு திருப்பூர், 7.12 மணிக்கு ஈரோடு, 7.58-க்கு சேலம், 9.35-க்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று, பின்னர் முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.