வடலூர் ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை
தே.தனுஷ்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம் பக்ரீத் பண்டிகை வருகின்ற 29ஆம் தேதி வருவதை முன்னிட்டு இன்று வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி, காடாம்புலியூர், வானதிராயபுரம், வடக்குத்து, தம்பிப்பேட்டை, சேத்தியாதோப்பு, மருவாய் , கல்குணம், அகரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த வெள்ளாடு, கொடி ஆடு, செம்மறி ஆடுகளை விற்பனை செய்வதற்காக வடலூர் ஆட்டு சந்தைக்கு கொண்டு வந்தனர் இந்த ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சென்னை, மதுரை, அரியலூர், இராமநாதபுரம்,தேனி , விருதுநகர், உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகாலை முதலிலே வடலூர் ஆடு சந்தைக்கு வந்து குவிந்தனர். ஆடுகளின் விலை குறைந்த விலை 5000- ரூபாய் இருந்து அதிக விலை 20000 ஆயிரம் வரையில் விற்பனை நடைபெற்றது பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி விருந்து கொடுப்பதால் ஆடுகளை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி அதனை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் வளர்த்து பின்னர் விருந்து கொடுக்கும் பழக்கம் இருப்பதால் இன்று ஆடுகளை வாங்க ஏராளமான இஸ்லாமியர்கள் வடலூர் ஆடு சந்தைக்கு வந்தனர். விலையை பற்றி கவலைப்படாமல் தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.இன்று நடைபெற்ற ஆடு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்