ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி பா.ம.க.வினர் மனு
ஜெயங்கொண்டம், ஜூன். 23
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள்சேர்க்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இச்சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பா.ம.க மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இராணியிடம் மனு அளித்தார். இந்நிகழ்வில் ஜெய ங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் வினோத் ராஜ்குமார், அருண் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.