கம்பராமாயண பாடல்களை பாட கேட்டு “மோடி நெகிழ்ச்சி”!
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தில் தான் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கவி சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். இன்றைய தினம், அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்டபத்தில் நமது பாரத பிரதமர் நரேந்தரமோடி கம்பராமாயண பாடல்களை பாட கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். தமிழ் இலக்கியத்தையும், ஆன்மீகத்தையும் தனது உயிராக கொண்டு பணி செய்துவரும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், தமிழ் இலக்கிய நூல்களை இயற்றுவதில் பன்முகத்தன்மை கொண்ட பேராசிரியர் ஞானசுந்தரம் மற்றும் குழந்தை மருத்துவத்தில் நிபுணரும் கம்பராமாயணத்தின் மீது மாறா பற்று கொண்டவருமான டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசையில் தனித்துவத்துடன் திகழும் சிக்கில் குருச்சரண் கம்பராமாயணத்தை அழகு தமிழில் கவி பாடினார்.