ஆரணி முதல் எட்டிவாடி வரை நான்கு வழி பாதை-அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் கூட்ரோட்டில், நெடுஞ்சாலை துறை சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 130 கோடி மதிப்பீட்டில் ஆரணி முதல் எட்டிவாடி வரை (மா.நெ.237) கி.மீ 2/2 முதல் 17/7 வரை இருவழி பாதையிலிருந்து நான்கு வழி பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியினை இன்று (12.03.2023) மாண்புமிகு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.