“ஜமீன் மேலூர் மாரியம்மன் கோவிலில்” பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் மேலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணியும் பக்தர்கள் இன்று பால்குடம் ,சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு வந்தடைந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.