ஆடி கடைசிவெள்ளி கிழமையை முன்னிட்டு மருதூர் தெற்கு பட்டி கிராமத்தில் ஸ்ரீ பச்சை மாரியம்மன் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு.
ஆடி கடைசிவெள்ளி கிழமையை முன்னிட்டு மருதூர் தெற்கு பட்டி கிராமத்தில் ஸ்ரீ பச்சை மாரியம்மன் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு.
12.08.2023, ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் மருதூர் தெற்குப்பட்டி கிராமத்தில்எழுந்தருளி அருள் பாளித்து வரும் அருள்மிகு பச்சை மாரியம்மன்ஆலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மருதூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என சுமார் 70 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் வேண்டுதல்கள் வைத்திருந்த பக்தர்கள், மருதூர் பெரிய ஏரி கரையில் இருந்து சக்தி கரகம் சூடிக்கப்பட்டு வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து வேண்டுதலுக்காக அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி பால் குடங்களை சுமந்தபடி மேளதளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பால்குடத்தை எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் 500 பேருக்கு அன்னதானம் செய்தனர் இதில் கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷத்தில் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபட்டனர். இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T