அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போட்டோ & வீடியோகிராபர்ஸ் நல சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச பயிற்சி வகுப்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போட்டோ & வீடியோகிராபர்ஸ் நல சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச பயிற்சி வகுப்பு.
ஜெயம்கொண்டாம் , 12.08.2023
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்
தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸ் நல சங்கத்தினர் சார்பாக திருச்சி யுனிவர்செல் நிறுவனத்தின் பானாசோனிக் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னதாக மாவட்ட அமைப்பாளர் கர்ணன் வரவேற்புரையும், மாவட்ட தலைவர் மோகன் முன்னிலையும், மாவட்ட செயலாளர் கண்ணன் நன்றியுரையும் ஆற்றினர்.
இதில் பானாசோனிக் நிறுவனத்தின் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்றுனர்களை ராஜசேகர், லெட்சுமிகாந்தன் ஆகியோர் கௌரவித்தார்கள் மேலும் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த லட்சுமிகலர் லேப் உரிமையாளர் ராஜன் அவர்களுக்கு மிகுந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக வேலைக்காரன் செந்தில் அவர்களின் போட்டோவாக் பயிற்சி கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் கொளஞ்சி, மாவட்ட துணை தலைவர்கள் கனகசபை, வெங்கடேசன், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், சிவா மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T