“இளம்பெண் உயிரை காவு வாங்கிய மதுப்பழக்கம்”-ரயிலில் பாய்ந்ததில் தலை துண்டானது!
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயில் அடிபட்டு தலை துண்டான நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் ரயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து கிடந்த பெண் குறித்து விசாரித்த போது அந்தப் பெண் குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது மனைவி கலா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களுக்கு மேல் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்த்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்கையில் விரத்தி அடைந்த கமலா குளித்தலை வழியாக சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.