“ஆதிதிராவிடர் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் பள்ளிகளை மூடக்கூடாது”
“ஆதிதிராவிடர் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் பள்ளிகளை மூடக்கூடாது”
ஆதிதிராவிடர் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர அந்த பள்ளிகளை மூடக்கூடாது.
தமிழக முதல்வருக்கு ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தல்.
எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த தமிழக அரசு முயற்சித்த போது அதை எதிர்த்த எதிர்க்கட்சிகள் ஆதி திராவிடர் பள்ளிகள் மூடப்படுவதை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்து அறநிலைத்துறை, சிறுபான்மை நலம் போன்ற பல வாரியங்கள் இருக்கிறது.
ஒவ்வொரு சமூகமும் தன் சமூகத்திற்கான வளர்ச்சிக்காக சில சலுகைகள் அரசால் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் 1959இல் ஆதி திராவிட நலத்துறை பட்டியலின மக்களின் வளர்ச்சிக் காக தனி பள்ளிகூடங்களை உருவாக்கியது.
அப்பொழுது அது பிரைமரி தொடக்கப் பள்ளிகளாக மட்டுமே துவங்கப்பட்டது இது அயோத்தி தாசர் அரசுக்கு வைத்த கோரிக்கை ஆகும்.
இவர்களுக்கான தனி விடுதிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆதி திராவிட மாணவர்களுக்கு தனியாக பள்ளிக்கூடங்கள் ஏன் திறக்கப்பட்டது என்றால் இந்த சமூகத்தை சேர்ந்த அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும்.
அவர்கள் பள்ளிக்கூடங்களை நோக்கி வரவேண்டும் அவர்கள் மீது நடத்தப்படும் பாகுபாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தான்.
ஆதிதிராவிட மாணவர்கள் அதிக அளவில் படிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத் தில் தான் இந்த திட்டம் அரசின் ஆதி திராவிட நலத்துறையால் இந்த பள்ளிகள் அவர்களுக்காகவே தனியே துவங்கப்பட்டது.
ஆதி திராவிட துறை இந்த பள்ளிகளை ஆரம்பித்த காரணத்தால் அந்த சமூகம் ஓரளவு படிக்க ஆரம்பித்து இருக்கின்ற இந்த வேளையில் இந்த ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளிகளை பொதுவான அரசு பள்ளிகளுடன் கல்வி துறையுடன் சேர்த்து செயல்பட வைப்பது தற்போது தேவையற்றது.
அதிதிராவிடர்கள் முழுமையாக படித்த பின்னர் அரசு பள்ளிகளுடன் இணைத்து கொள்ளலாம்.
இன்னும் பல கிராமங்களில் சாதிய பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது அதற்குப் பல உதாரணங்கள் எடுக்காட்டுக்கள் இன்னும் உள்ளது.
அனைத்து மாணவர்களும் ஒரே பள்ளியில் பாகுபடின்றி ஒன்றாக படிக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.
ஆதி திராவிட பள்ளிகள் ஆரம்பிக்கபட்டதான் நோக்கம் அந்த சமூகத்தில் கல்வி வளர்ச்சி குறித்தும் அரசு நன்கு கலந்தாலோசித்த பின்னர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் தமிழக அரசு ஆதி திராவிட பள்ளிகளை தரத்தை உயர்த்தவதை தவிர்த்து அரசு அதை முடிட முனைப்பு காட்டுகிறது இது தூரத்திரிஷ்மானது.
இதற்கான எந்த முன்னேற்பாடு அல்லது ஒரு முறையான கருத்துக்கணிப்போ அல்லது அரசியல் கட்சிகள் அல்லது ஆதி திராவிடர் நலன் அறிந்த வல்லுனர் களின் எந்த ஆலோசனையும் கேட்கப்படாமல் ஆதிதிராவிடப் பள்ளிகளை கல்வித் துறையுடன் இணைக்க அரசு முற்படுவது சரியல்ல.
ஏற்கனவே 60% பட்டியலின மக்கள் இருக்கும் இடங்களில் ஆதிதிராவிடப் பள்ளிகள் துவக்க திட்டமிடப்பட்டு தான் துவக்கப்பட்டன.
இந்த பள்ளிகளில் 87,729 எஸ்சி மாணவர்கள் படிக்கிறார்கள், 27,168 எஸ் டி பழங்குடி மாணவர்கள் படிக்கிறார்கள்,
மொத்தம் 45,117 பள்ளிக்கூடங்கள் உள்ளது இதில் ஆதி திராவிட நல துறையின் கிழ் 14,261 பள்ளிகள் உள்ளன.
ஆதி திராவிடர் பள்ளிகளை எஸ்சி, எஸ்டி குழந்தைகள் முழுமையாக மேம்படும் வரை ஆதி திராவிடர் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க கூடாது.
மத்திய அரசின் எஸ்சி, எஸ்டிதங்கள் ஸ்காலர்ஷிப் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியிருக்கலாம். ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் அனைத்தும் கிடைக்க மாநில அரசு முயற்சிக்க வேண்டும்
மாநில அரசு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு துணை போக கூடாது.
ஆதி திராவிட மக்களின் நலன் விரும்பும் வல்லுநர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அரசு அமைக்க வேண்டும், கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும்
சாதி மத பாகுபாடின்றி நம் தேச குழந்தைகளின் வளர்ச்சிக்காகவே அரசும் இந்த ஆதி திராவிட நலத்துறையும் செயல் பட வேண்டும்.
ஆதி திராவிட பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர அதை முடுவதோ அல்லது பள்ளிகல்வி துறையோடு இணைப்பது கூடாது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.