மஹாராஷ்டிராவில் பழ வியாபாரி ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ., எனப்படும் மாதாந்திர தவணை திட்டத்தில் மாம்பழங்களை விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் கவுரவ் சானாஸ். பழ வியாபாரியான இவர், நாடு முழுதும் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
தற்போது, மாம்பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், மஹாராஷ்டிராவின் தேவ்கட், ரத்னகிரி பகுதிகளில் விளையும் அல்போன்சா உயர் ரக மாம்பழங்களை, இவர் தன் வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ., முறையில் விற்பனை செய்து வருகிறார்.
மாம்பழங்களின் ராஜாவான இந்த அல்போன்சா, சில்லரை வணிகத்தில் டஜன் ஒன்றுக்கு 800 முதல் 1,300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு அல்போன்சா மாம்பழங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கவுரவ் இ.எம்.ஐ., முறையில் 3, 6 அல்லது 9 மாதங்களில் பணத்தை வசூலிக்கிறார்.