இலவச மருத்துவ முகாம்!
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைந்துஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கும்பகோணம் அன்பு மருத்துவமனை, ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்கம், ஜெயங்கொண்டசோழபுரம் உதவும் கரங்கள் நடத்தும், இலவச மருத்துவ முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இதற்கு ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்க தலைவர் லயன் ஆனந்த்குமார் தலைமை வகித்தார். செயலாளர் அறிவழகன், பொருளாளர் பாஸ்டின்ராஜ் மற்றும் ஜெயங்கொண்டசோழபுரம் உதவும் கரங்கள் செயலாளர் சேதுராமன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் ஏற்பாடு சாசனத் தலைவர் சுரேஷ், சண்முகம் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் முகாமிற்கான செய்து இருந்தனர். முகாமில் பொது மருத்துவம், காய்ச்சல், சளி, இருமல், இதய நோய்கள், எலும்பு சம்பந்தமான நோய்கள், நுரையீரல் சம்பந்தமான மருத்துவம் மகளிர் நல மருத்துவம், வயிறு சம்பந்தமான நோய்கள், சிறுநீரக மருத்துவம் தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல் மருத்துவம் ஆகியவற்றிற்கு மருத்துவர்களால் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கண்டு சிகிச்சை பரிசோதனை செய்து கொண்டனர்.இந்நிகழ்வில் அன்பு மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், அறிவழகன், ராஜ், மத்யாஸ், ஜெயங்கொண்டசோழபுரம் உதவும் கரங்கள் நிர்வாகிகள், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் .சங்கர் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.