வருவாய் அதிகரித்தும் பெரிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை; எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
தமிழக பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் ஆட்சியில் இருக்கும் போது தமிழக மக்களை கடனாளி ஆக்கி விட்டதாக பேசிய ஸ்டாலின் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார். வருடம் வருடம் தடுப்பணைகள் கட்டப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது. வருடம் வருடம் 500 மின் பேருந்துகள் வாங்கப்படும் என்கிற அறிவிப்பு மட்டுமே வருவதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி அடுத்த வருடமும் இதே அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம். வருவாய் அதிகரித்தும் பெரிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை நாங்கள் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தி விட்டு வேறு பெயரில் திட்டங்களை அறிவித்துள்ளதே தவிர பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட். கடன்களை சரிசெய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் போலும் எனக்கூறினார்.