உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், காப்புத் தொகையும் பறிமுதல் செய்யப்படும்; அரசு எச்சரிக்கை…!
சென்னையில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்தியா துணைத்தேர்தல் கமிஷனர் கடந்த 2-ந்தேதி அன்று நடத்தியது. இந்த கூட்டத்தில் அனைத்து மனமகிழ் மன்றம் மற்றும் தனியார் நடத்தும் பார்களான எம்.எல்.2., எப்.எல்.3 மற்றும் டாஸ்மாக் பார்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்களது மதுக்கூட வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்களை புகைப்படம் எடுத்து மாவட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், காப்புத் தொகையும் பறிமுதல் செய்யப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.