தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானவை என தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் டுவிட்!
தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானவை என சுப்ரீம் கோர்ட்டு மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்திடும். இந்தத் தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதோடு அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும், இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.