அரசு பஸ்களில் ஆண்களுக்கும் சலுகை வழங்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரிசி விலை உயர்ந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பொது போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். சென்னையில் தற்போது 3,500 பஸ்கள் இருக்கும் நிலையில், அதை 8 ஆயிரம் பஸ்களாக உயர்த்த வேண்டும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படுவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன்பின்னர் படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றார்.