முளைகட்டிய பயிர்களுடன் வந்து தாசில்தாரிடம் மனு அளித்த விவசாயிகள்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதுகுளத்தூர் தாலுகா அமைந்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், மிளகாய்க்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் வீதமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் நடை பயணமாக வந்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். விவசாயிகள் அனைவரும் கையில் முளைத்த பயிர்களை கொண்டு வந்து வட்டாட்சியரிடம் காண்பித்தனர். இதனை கூடிய விரைவில் சரி செய்வதாக வட்டாட்சியர் உத்தரவாதத்தின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். முதுகுளத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் சின்ன கண்ணு சமரச பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்.