இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அருகே நாட்டு வெடிகள்!
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே இலங்கை தமிழர் கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 84 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலைகள் நேற்று இரவு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் கீர்த்திபன் வயது 31 என்பவர் சிறுநீர் கழிக்க அரசு புறம்போக்கு நிலத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. இதனைக்கண்ட கீர்த்தீபன் அந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் நாட்டு வெடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமினை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கியூ பிரிவு போலீசாரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாமளாதேவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த பையில் பேப்பரால் சுற்றப்பட்ட 16 நாட்டு வெடிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்தபையில் இருந்த நாட்டு வெடிகளை கைப்பற்றி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நாட்டு வெடிகள் கோவில் திருவிழா உள்ளிட்டவைகளுக்கு கயிற்றில் கட்டி வெடிக்கப்படும் குண்டுகள் ஆகும். அவை மேற்கண்ட இடத்தில் 3 மாதங்களாக கிடந்திருக்கலாம். இதனால் மழையில் நனைந் தும், வெயிலில் காய்ந்துள்ளதாலும் அவை திரி இல்லாமல் உள்ளது. கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகள் சிறுவாச்சூரில் உள்ள வெடிமருந்து பொருட்கள் குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு உத்தரவு பெற்று அந்த நாட்டு வெடிகள் செயலிழக்கப்படும், என்றனர்.