“பாமக செயற்குழு கூட்டம்”
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மங்கலம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாநில மாணவர் சங்க செயலாளர் கொடுக்கூர் எஸ்.ஆர். ஆளவந்தார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாமக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், பாட்டாளி மாணவர் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், ரமேஷ், வெங்கடேஷ், சூரக்குழி கார்த்திகேயன், ரமேஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் சங்க செயலாளர் மோகன்ராஜ் வரவேற்று பேசினார். பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிப் பேரவையின் மாநில செயலாளர் மற்றும் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாலு , பாமக மாநில மாணவர் அணி துணை செயலாளர் டி எம் டி திருமாவளவன், மாணவர் சங்கத் தலைவர் கோபிநாத், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தர்ம பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தங்க செம்மலை உள்பட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் நகர பாமக மாணவர் சங்க செயலாளர் நெடுமாறன் நன்றி கூறினார்.