அஞ்சல் துறை கண்காட்சி!
திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழாவையொட்டி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவரின் சீறிய முயற்சியால் இந்திய அஞ்சல் துறை சார்பாக பல்வேறு அரிய சேவைகள் பொது மக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அஞ்சல் தலை விற்பனை, அஞ்சல் தலை சேவை, சிறப்பு அஞ்சல் முத்திரையிடுதல் போன்ற அரிய சேவைகள் வழங்கப்படுகின்றன. கர்நாடக இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள், தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இடங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் ஆகியவற்றிற்கு இந்திய அஞ் சல் துறையால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகள் கடை எண் 67ல் சிறப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு கடையில் ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. பொது மக்கள் அஞ்சல் துறையின் அரிய சேவைகளை பயன்படுத்தி, பயன்பெற வேண்டுமாய் தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி கேட்டு கொண்டுள்ளார்.