கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.42.71 கோடியில் பாலம்!

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே என் நேரு, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்,  துணை மேயர், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர், இணை ஆணையாளர், மண்டலக்குழுத் தலைவர், மாமன்ற உறுப்பினர், மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *