தைப்பூசத்தையொட்டி “பால்குடம்” எடுத்து சிறப்பு வழிபாடு; பக்தர்கள் சாமி வேடம் அணிந்து உற்சாகம்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 29ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பால்குடம், அக்னிகட்டி ,காவடி எடுத்து பம்பை அடித்து , அம்மன் வேஷம், காளி வேஷம் போட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தவது வழக்கம். என்னைத் தொடர்ந்து பாதையா செல்லும்பக்தர்கள் சமயபுரம் சென்று அம்பாளை வழிபட்டு வருவதாக தெரிவித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி தீச்சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.