வாங்க அரிசி வடை எப்படி செய்யலாம் என பார்ப்போம்!
தேவை:- இட்லி அரிசி – 2 கப், துவரம் பருப்பு- 1/2 கப். வரமிளகாய் – 8, தனியா – 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் -15, உப்பு, எண்ணெய் தேவைக்கு, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்.
செய்முறை:- இட்லி அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் போடவும். அத்துடன் வரமிளகாய், தனியா, கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து. சிறிது தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வடை மாவு பதத்துக்கு மீண்டும் சிறிது நேரம் அரைத்து எடுக்கவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவிலிருந்து எலுமிச்சை சைஸ் உருண்டையாக எடுத்து வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான அரிசி வடை ரெடி.