“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள்” கூறி சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு சிறை!
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம்தேதி சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதில், எனது 17 வயது மகளிடம் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இதுகுறித்து கடந்த 2022ம் ஆண்டு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பாலாஜி மீண்டும் மகளிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல்தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே, பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி மகளிர் போலீசார், 2வது முறையாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துதப்பிய பாலாஜியை தேடிவந்தனர். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலாஜி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல்கிடைத்தது. ‘அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற இன்ஸ்பெக்டர் உமாமகேஷ்வரி தலைமையிலான போலீசார் பாலா.ஜியை கைது செய்து உயர்நீதிமன்றவளாகத்தில் உள்ளபோக்சோ நீதிமன்றத்திலஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.