தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பு!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநகவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் சு.குணசேகரன்,பொதுச்செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி,மாநில பொருளாளர் சே.நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு அரசாணை 243 பற்றியும், அதன் பாதிப்புகளையும் விளக்கிக்கூறி பேரியக்கத்தின் கருத்தை பதிவுசெய்தனர். கூட்டத்தில்
பேரியக்கத்தின் ஈரோடு மாவட்ட துணைச்செயலாளர் சதீஸ்குமார் உட்பட அனைத்து சங்க பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவுசெய்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி 6.1.2024 மாவட்ட அளவில் டிட்டோஜாக் ஆயத்தக்கூட்டம் கூட்டம் நடத்துவது. 11.1.2024 வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. 27.1.2024 மாவட்ட அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளுக்கும் உத்தரவு தரவேண்டும். அரசாணை 243-ஐ உடனே ரத்து செய்து ஒன்றிய முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநகவடிக்கைக்குழு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.