வீட்டின் அறைக்குள் மாட்டிக்கொண்ட குழந்தையால் பரபரப்பு!

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஜாஸ்பர். இவருடைய மனைவி கிளாரா. இவர்களுக்கு 2½ வயதில் கிளான்ஸி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் தங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வீட்டிற்குள் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, ஒரு அறைக்குள் சென்று உட்புறமாக தாழிட்டுகொண்டது. பின்னர் அதை திறக்க தெரியாமல் அழத்தொடங்கியது. குழந்தையின் அழுகுரல்கேட்டு உள்ளே சென்ற பெற்றோர் குழந்தை அறைக்குள் மாட்டிக்கொண்டதை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி கதவின் தாழ்பாளை திறந்து குழந்தையை மீட்டனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial