அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு; தரிசன நேரம் நீட்டிப்பு!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து 23ம் தேதி முதல் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர் கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்தனர். இதனால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக, தரிசன – நேரத்தை நீட்டித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. காலை 6 மணி முதல், ராமரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம். மதியம் 12 மணி முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்தி நடைபெறும். நேற்று பவுணர்மி என்பதால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஏராளமானோர் அங்குள்ள சரயு நதியில் புனித நீராடி னர். பஸ்தி, கோண்டா, அம்பேத்கர்நகர்,பாரபங்கி, சுல்தான்பூர் மற்றும் அமேதி ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் அயோத்தியின் எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மேலும் அயோத்தியில் ப பாதுகாப்புக்காக விரைவு அதிர டிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் கள் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள முக்கிய பிரமுகர்கள், அது பற்றி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றார். இதற்கிடையில், பிரதமர் மோடி, மார்ச் மாதம் வரை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செல்வதை ஒன்றிய அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial