ரூ.74.23 கோடியில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தொடக்கம்!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் மற்றும் வட்டத்தில், ரூ.74.23 கோடி மதிப்பீட்டில், பெருவளை வாய்க்கால், அய்யன் வாய்க்கால், பங்குனி வாய்க்கால் மற்றும் லால்குடி ஒன்றியத்தில் உள்ள கீழ்பெருவளை வாய்க்கால், தெற்கு அய்யல் வாய்க்கால், மேல் பங்குனி வாய்க்கால், கீழ் பங்குனி வாய்க்கால், மலட்டாறு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகளை இன்று (10-01-2024) அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.