தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகையில், கல்வி அறிவு பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்காகும். தொழில் துறை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனதுக்கு மிகவும் நெருக்கமான துறை. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தொழில் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தொழில் துறையினர் லாவோஸ் செல்கிறோம். அதன்பின், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.