2 உயிர்களை காவு வாங்கி கனமழை!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இந்நிலையில் நன்னிலம் தாலுகா அதம்பார் கிராமம் ஒத்தவீடு தெருவில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ராஜசேகரன் என்பவரது வீட்டின் சுவர் திடீரென ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ராஜசேகரன் மகன் மோகன்தாஸ்(வயது 11) லேசான காயமும், மகள் மோனிஷா(வயது 9) பலத்த காயமும் அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிச்சை பலனின்றி சிறுமி மோனிஷா இறந்தார். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி விச்சூர் காலனித் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மணியம்மாள்(வயது 60). இவர் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *