மத்திய அரசு திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
சென்னையில் ஜெய்சுந்தர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபடுகிறது மக்களுக்கு சேவைபுரியும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், தமிழகம் உட்பட கடைசி எல்லை வரை உள்ளவர்களைச் சென்றடைவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் ஜன்தன் யோஜனா திட்டம் குறித்து தெரிவிக்கையில், இந்தியா முழுவதும் 51 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் உள்ளன, அதில் 55% பெண்கள். – தமிழ்நாட்டில் 1.5 கோடிக்கு மேல் உள்ள கணக்கில், 58% பெண்கள். சென்னையில் 9.25 லட்சம் பேர் உள்ள கணக்கில், 61% பெண்கள். பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ்: – இந்தியா முழுவதும் சுமார் 44 கோடி பயனாளிகளுக்கு இதுவரை ரூ. 26 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 5.2 கோடி பயனாளிகளுக்கு ரூ.2.67 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 20.6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.16,330 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின்கீழ்:- இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு ரூ.22,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 20,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு, 2,200 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 3900க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு ரூ.434 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்வநிதியின் கீழ்:-இந்தியா முழுவதும் சுமார் 57 லட்சம் தெருவோர வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர், இதில் 44% பெண்கள், 43% இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் 22% பட்டியலினத்தவர்கள் / பழங்குடியினர்கள்.
தமிழகத்தில், 3.6 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர், இதில் 67% பெண்கள்; 32% ஓபிசி மற்றும் 18% பட்டியலினத்தவர்கள் / பழங்குடியினர்கள். சென்னையில் மட்டும் 79,300 தெருவோர வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.
பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின்கீழ், இந்தியா முழுவதும் 18.86 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
-தமிழ்நாட்டில் 74 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
-சென்னையில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
பிரதமரின் சுரக்ஷாபீமா யோஜனா திட்டத்தின்கீழ்,
-இந்தியா முழுவதும் 41.79 கோடி பேர் பதிவுசெய்துள்ளனர்.
-தமிழ்நாட்டில் 1.96 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
-சென்னையில் 15.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின்கீழ்,
-இந்தியா முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
-தமிழ்நாட்டில் 40 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உட்பட
-சென்னையில் 2.4 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
மக்கள் மருந்தகங்கள்
இந்தியா முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. நாடுமுழுவதும் 2,000 க்கும்மேற்பட்ட மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நுகர்பொருட்களை சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது மலிவான விலையில் வழங்கப்படுகிறது.
-சென்னையில் 117 உட்பட, 859 தமிழகத்தில் மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டில்உள்ளன என்றார்.