வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய விவசாயி கைது!

சேலம் அருகேயுள்ள காரிப்பட்டி ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத 27 வயதான இளம்பெண்ணுக்கு, திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதனையில், இளம்பெண் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதற்கு யார் காரணம்? என்று உறவினர்கள் விசாரித்தனர். இதில் அவரது உறவினரான விவசாயி அர்ஜூனன் (55) தான் காரணம் என்பது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இந்த செயலில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பலாத்கார வழக்கில் அர்ச்சுனனை போலீசார் கைது செய்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *