“ஆசிரியர்கள். அரசு ஊழியர்களுக்குபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,
“ஆசிரியர்கள். அரசு ஊழியர்களுக்குபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,”
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கத்தின், வரலாற்று சிறப்பு மிக்க மாநில செயற்குழு கூட்டம் இன்று (25.11.2023) காலை சென்னை, திருவல்லிக்கேணி, வசந்தம்மஹாலில் நடைபெற்றது,
சென்னையில் நடைபெற்ற பேரியக்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு
இந்நிகழ்விற்குமாநிலத்தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்,
கூட்டத்தில் பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளரும், உலகத் தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளருமான ந.ரெங்கராஜன் வரவு செலவு வாசித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானவிபரங்கள், ஆசிரியர்களின் முக்கிய தீர்மானங்களான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,
ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களைபயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்,
ஆசிரியர்களின் தகுதித் தேர்வு ரத்து செய்தல் வேண்டும்,
பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வை தவிர்க்க வேண்டும்,ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் ,
துறை தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்,
பணி பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்,
பி. லிட் கல்வித் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.எட் உயர் கல்விக்கு ஊக்க ஊதியம், அனுமதி,தணிக்கை தடை நீக்கம் செய்தல் வேண்டும்,
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன் வழங்க வேண்டும்,
பதவி உயர்வில் 25% ஒதுக்கீடு வழங்க வேண்டும்,
ஊதியக்குழு விதி 4(3) அமுல்படுத்த வேண்டும்,
25 ஆண்டு பணிக்காலத்திற்கு நன்னர் ஊதியம் வழங்க வேண்டும்,
ஆகிய தீர்மானங்களை வாசித்து செயற்குழு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை மாநிலத் தலைவர் மதிப்புமிகு மு. லட்சுமிநாராயணன் அவர்கள்*
முந்தைய கூட்ட தீர்மானங்களை மாநிலத் துணைச் செயலாளரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான *திரு ஈ.இராஜேந்திரன் அவர்கள்* வாசித்தார் மாநிலத் துணைத் தலைவர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள், இயக்கப் புரவலர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மற்றும் எல்லையூர் மாவட்ட, வட்டார, மாநில, இந்நாள், மேனாள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாநில பொருளாளர் குமார் நன்றி கூறினார்