ஐகோர்ட் உத்தரவு திருவண்ணாமலை கோவில் எதிரே வணிக வளாகம் கட்ட தடை.
ஐகோர்ட் உத்தரவு திருவண்ணாமலை கோவில் எதிரே வணிக வளாகம் கட்ட தடை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை வழிபட முடியாத வகையில், வணிக வளாகம் கட்டும் பணிக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது.
கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்துக்கு எதிரே இருக்கும், 11 கால் மண்படத்தை ஒட்டிய பகுதியில், இரண்டு அடுக்குகளில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
கோபுர தரிசனம், கோடி புண்ணியம்’ என்பதால், 20 கி.மீ., துாரம் வரை தெரியும் இந்த ராஜகோபுரத்தை, வெகு துாரத்தில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
ராஜகோபுரம் எதிரே, ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றி விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 40 அடி வரையிலான உயரத்திற்கு, அடுக்குமாடி வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகம் முழுதும் கட்டி முடிக்கப்பட்டால், கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இது சம்பந்தமாக எந்த விபரங்களையும், கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை.
கட்டுமான பணியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபுரம் எதிரே வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தனர்.
உத்தரவு பிறப்பித்த நிமிடத்தில் இருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதால் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.