ஒரு நாள் மழைக்கே சேரும் சகதியுமான சாலை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் மெத்தனம் காட்டி வரும் அதிகாரிகள்!!!
கிராம சபையில் போடப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்க விட்ட ஊராட்சி நிர்வாகம்!!
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் –
டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வானதி ராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர் கே சிட்டி உள்ளது இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள நிலைகள் பொதுமக்களில் அடிப்படை தேவையான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர் வானதிராயபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிதியினால் வானதிராயபுரம் கிராம பகுதியில் மட்டுமே பல அரசு திட்டங்களும் என்எல்சி இந்தியா சுரங்கம் 1A அருகாமையில் உள்ள கிராமம் என்பதால் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல திட்டங்கள் வானதி ராயபுரம் கிராம பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது
மேலும் இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கையில் ஆர் கே சிட்டி பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் உருவாகி வருகின்றது இப்பகுதி இன்னும் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பாடமல் உள்ளதாக தெரிவித்து வரும் வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகம் பல ஊராட்சி திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது
கடந்தாண்டில் ஆர் கே சிட்டி பகுதியில் உள்ள ஒரே ஒரு தெருவிற்கு மட்டும் சாலை வசதி அமைக்கப்பட்டது மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீருக்காக போடப்பட்டுள்ள பைப் லைன்களில் காற்று மட்டுமே வருகிறது எஞ்சி உள்ள மற்ற தெருக்களில் இன்று வரை சாலை வசதிகள் இல்லை இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் கூலி வேலைக்கு செல்லும் தினக்கூலி தொழிலாளிகள் மற்றும் அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்
அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினாலும் ஆம்புலன்ஸ் வாகனம் மழைக்காலங்களில் இப்பகுதிக்கு வந்தால் சேற்றில் சிக்கிக் கொண்டு சிரமப்படுகிறது
போர்க்கால அடிப்படையில் சாலையை செம்மல் நிரப்பி சமன்படுத்தி கொடுக்குமாறு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை வசதி குறித்து கோரிக்கை வைத்தும் இன்று வரை சாலை வசதி மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட தெருவிளக்குகள் அனைத்தும் பராமரிப்பின்றி மழையில் நனைந்து எரியாமல் உள்ளதால் இரவு நேரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் திருட்டு சம்பவங்களும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வருகிறது பலமுறை கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளாதது மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனை போக்கை காட்டுகிறது
தற்பொழுது உள்ள அரசு பொறுப்பேற்றதும் கிராம வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சிகளுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் பல ஊராட்சிகளில் இதுபோன்று திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
பல புகார்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிக நடவடிக்கை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே மிகுந்த மனவேதனையும் முகச்சுழிப்பையும் ஏற்படுத்துகிறது.
சேரும் சகதியுமான சாலையால் உயிர் சேதம் ஏற்படும் முன்
மாவட்ட நிர்வாகம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.