பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்லூரிமாணவர்களுக்கு பாராட்டு விழா
பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்லூரிமாணவர்களுக்கு பாராட்டு விழா
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்துமுடிந்த பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர்எம்ஆர்.ரகுநாதன், இயக்குனர் முனைவர் இராஜமாணிக்கம், முதல்வர்கள் முனைவர் சங்கீதா, முனைவர் மதியழகன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கியதுடன் ரூபாய் 2 இலட்சம் மதிப்புள்ள புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.
மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் படித்து வாழ்க்கையில் உயருதல் வேண்டும் என இயக்குனர் ஆர்.இராசமாணிக்கம் வாழ்த்தினார்.
கல்லூரி தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் உரையாற்றிய போது பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுயவருவாய், பொருளாதாரம் ஆகியவற்றில் உயர்ந்தால் தான் சமவுரிமையை அடையமுடியும் , அதற்கு கல்வியால் சுயமாக வருவாயை ஈட்டவேண்டும்.
அடிமைத்தனம், வறுமை, ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள், சமூக ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் கல்வி ஒன்றால் தான் அது சாத்தியமாகும்.
அதற்காக படியுங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
கல்வியால் உயர்ந்த பதவிகளையும், அதிகாரத்தையும் பெறுங்கள்.
கல்வியால் பொருளாதாரத்திலும் உயர்ந்திருங்கள்.
உங்கள் உயரிய கனவுகள் எல்லாம் நீங்கள் பெற்ற கல்வியால் நனவாகும் என வாழ்த்தினார்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்
.