வடலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணிநியமன ஆணையினை வழங்கினார்.
வடலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ,பணிநியமன ஆணையினை வழங்கினார். “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 2564வேலைநாடுநர்கள் பங்கேற்றனர்”,
கடலூர், மாவட்டம்
வடலூரில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை யொட்டி,கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநிலஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து வடலூர் வள்ளலார் குருகுலம்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு,மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர்.அருண் தம்புராஜ், தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தேர்தெடுக்கபட்டுள்ள வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி, பேசினார்.
அமைச்சர்
திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க முன்னாள்
முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடலூர் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற
வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற உயரிய நோக்கில் சிறப்பு வேலை வாய்ப்பு
முகாம்கள் நடத்தப்படுகிறது. நாங்கள் ஆட்சியில் இல்லாத போதே இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தினோம்,
இதுபோன்ற முகாம் கடலூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது,கடலூர் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்டது, கிராம பகுதியில்
உள்ள இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை பெறுவதன் மூலம்
அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என தெரிவித்தார்.
இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 2564
வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். இதில் 1326 ஆண்கள், 1225 பெண்கள் மற்றும் 13
மாற்றுத்திறனாளிகள் கலந்துக் கொண்டனர். இம்முகாமில் 127 தனியார் நிறுவனங்களை சார்ந்த
வேலையளிப்போர் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தி தங்களுக்கு தேவையான பணியாளர்களை
தேர்வு செய்தனர். இம்முகாமில் 267 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 94 பெண்கள், 170ஆண்கள் மற்றும் மூன்று மாற்றுத்திறனாளிகள் ஆவர். இரண்டாம் கட்ட தேர்விற்கு 182 நபர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். இதில் 74 பெண்கள், 108 ஆண்கள் என அவர் தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கில் பணியாளர்களை இந்த முகாமின் மூலம்
தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கிட
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் வேலை வாய்ப்பு கிடைத்த இளைஞர்கள் கிடைத்த வேலையில் உடனடியாக சேர்ந்து பயனடைய வேண்டும்,
கிடைத்த வேலையை ஆர்வமாக எடுத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். இளம் வயதிலேயே தங்களுக்கென ஒரு வேலையை பெற்று உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி
கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், பண்ருட்டி
சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்
எம்.ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ‘இயக்குநர் மதுபாலன் , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் நகர்புற இயக்குநர் செந்தில்வடிவு ,
மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன், நகரமன்ற துணைத் தலைவர் சுப்புராயலு, வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் தொழில் நெறிவழிகாட்டுமைய உதவி இயக்குநர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனத்தினர், வேலை நாடுநர்கள் கலந்துகொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்