புதிய மாணவர்-மாணவியர் விடுதிக் கட்டடங்கள் திறப்பு!

தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தி.ந.வெங்கடேஷ், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் வா.சம்பத் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *