ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

24.07.2023

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக திருவிழாவில் அம்மனுக்கு பால் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கல்லாத்தூர் வண்ணான்  ஏரியிலிருந்து கரகம் சோடிக்கப்பட்டு வான வேடிக்கையுடன் மேலங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை சென்றடைந்து 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் .

நிகழ்ச்சியானது ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமையிலும் ஊர் நாட்டார்கள் குமார், பழனிச்சாமி, இளையராஜா ஆகியோர் முன்னிலையிலும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன் பொன்வடிவேல் சுந்தரம் ஆகியோர்களும் மற்றும் ஊர்  மக்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஒரு மாத காலமாக பூமுடையான் குடியாடு மகாபாரத ஆசிரியர் கொளஞ்சிநாதன் தலைமையில் மகாபாரதம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் 18 மண்டகப் பிடிகள் தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது இறுதியாக நேற்று தீமிதி திருவிழாவானது வெகு விமர்சையாக நடந்தேறியது. மேலும் இவ்விழாவில் கல்லாத்தூர் தண்டனை, மேலூர், கீழகுடியிருப்பு,, மேலகுடியிருப்பு, வடுகர்பாளையம், வடவீக்கம், குளத்தூர், கூவத்தூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள்  கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுசாமி தரிசனம் செய்து சென்றனர்.

அரியலூர் செய்தியாளர் D.வேல்முருகன்

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial