தமிழ்நாட்டில் என்ஜினியர் ஆக ஆசைப்படுற ஒவ்வொருத்தரும் பாருங்க.. இது தெரியாமல் போய் மாட்டிக்காதீங்க!
24.07.2023
என்ஜினியரிங் கல்லூரியில் சேரப்போறீங்க அப்படீன்னா, அல்லது உங்களுக்கு தெரிஞ்வங்க யாராவது இன்ஜினியரிங் கல்லூரியில் சேரப்போறாங்க அப்படீன்னா, தயவு செய்து https://www.tneaonline.org/ தளத்துல போய் பார்த்துட்டு காலேஜ்ஜை முடிவு பண்ண சொல்லுங்க.. 20 சதவீதத்திற்கு மேல் பாஸ் அவுட் உள்ள கல்லூரியில் படிப்பதே நல்லது. எனவே தெரியாமல் போய் மாட்டிக்காதீங்க.
என்ஜினியர் ஆக வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கிறது. சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிலர் ஆசைப்படுவார்கள். சிலர் சிவில் என்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவார்கள். சிலர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவார்கள்.சிலர் எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுவார்கள். சிலர் ஏரோ நாட்டிக்கல் என்ஜினிரியங் படிக்க ஆசைப்படுவார்கள்.
என்ன வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் படிக்க முடியும். உயர் கல்வி வசதிகளில் நாம் டாப் தான். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் எந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்பு படித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டிப்பாக ஆய்வு செய்து,அதன்பிறகு கல்லூரிகளில் சேருங்கள். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு கிடைக்கிறது என்பதற்காக மோசமான கல்லூரிகளில் சேர்ந்து வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.
பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை அந்த கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து சேருவது குறித்து முடிவெடுங்கள். நல்ல தேர்ச்சி விகிதம்உள்ள கல்லூரிகளில் சேருபவர்களுக்கு பிரச்சனை இருக்காது. மாறாக மிக மோசமான தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளில் படிக்க போனால் அங்கு உங்களின் கல்வி தரமும் பாதிக்கப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் சேரும் முன்பு https://www.tneaonline.org/ தளத்துல போய் பாருங்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது என்பதுகுறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடந்த 2022ம் ஆண்டில் எப்படி தேர்ச்சி விகிதம் இருந்தது. எந்த கல்லூரியில் மாணவர்கள் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளார்கள் என்ற பட்டியல் இருக்கும்.
இந்த பட்டியலில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற கல்லூரிகளில் சேர முயற்சி செய்யுங்கள். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாத கல்லூரிகள் என்றால் யோசித்து முடிவெடுங்கள்.குறிப்பாக 20 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளில் சேர வேண்டுமா வேண்டாமா என்பதையை யோசியுங்கள். மிக குறைவான தேர்ச்சி விகிதம் அதாவது பாஸ் அவுட் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம்.
அதற்கு பதில் பொறியியல் படிப்பை படிக்காமல் இளங்கலை படிப்பை படிப்பதை சிறப்பானதாக இருக்கும். எனவே இந்த பட்டியலை பார்த்து சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.எந்த காரணம் கொண்டும் விளம்பரங்களை நம்பியோ அல்லது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பியோ கல்லூரிகளில் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்