வடலூர் அருகே விருத்தாச்சலம் சார் ஆட்சியர் ஜீப் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
வடலூர் அருகே விருத்தாச்சலம் சார் ஆட்சியர் ஜீப் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சார் ஆட்சியர் லூர்துசாமி உட்பட 3 பேர் லேசான காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் கலால் உதவி ஆணையர் லூர்துசாமி 56 இவர் கூடுதல் பொறுப்பாக விருத்தாச்சலம் சார் ஆட்சியராக உள்ளார் இன்று மாலை விருத்தாச்சலத்தில் இருந்து கடலூருக்கு சார் ஆட்சியர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் சென்றுள்ளனர். ஜீப்பை டிரைவர் வேல்முருகன் வழக்கமாக ஓட்டி வந்துள்ளார் இந்நிலையில் வடலூர் சிப்காட் அருகே ஜீப் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேகமாக திருப்பி உள்ளார். இதில் நிலை தடுமாறிய ஜீப் உருண்டு சென்று சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உள்ளே இருந்த சார் ஆட்சியர் லூர்துசாமி லேசான காயமும் ஓட்டுனர், உதவியாளர் ஆகியோருக்கு பலத்த காயமும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.