காவல்துறை மற்றும் மாடர்ன் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்.
காவல்துறை மற்றும் மாடர்ன் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்
அரியலூர்மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று அரியலூர் மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமல் பிரிவு, மாடர்ன் தொழில்நுட்பம்கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் சுகாதார பிரிவு சார்பில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாடர்ன் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர்
எம்கேஆர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாடர்ன் கல்விக் குழும தாளாளர் பழனிவேல் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் (பொறுப்பு) கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த பேரணி அண்ணாசிலையில் இருந்து புறப்பட்டு நான்கு ரோடு மற்றும் முக்கிய கடைவீதி வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. அதில் மாணவ மாணவியர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து பதாதைகளை கையில் ஏந்தியும் வந்தனர். மேலும் விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்களை காவல்துறையினர் பொதுமக்களுக்கு வழங்கி போதை பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ரம்ஜான் பாத்திமா கனி கல்வியல் கல்லூரி முதல்வர் மரிய கிறிஸ்தவராஜ் துணை முதல்வர் திருவள்ளுவர் கலைக் கல்லூரி முதல்வர் அருள் உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன்நகராட்சி சுகாதார பிரிவு களப்பணியாளர் விஜயகுமார் மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையாளர் உமாதேவி, கலையரசி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாத், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாகிரா பானு,உதவி ஆய்வாளர்கள் தனசெல்வன், நாகராஜன்,சுப்பராயன், இளங்கோவன், தலைமை காவலர்கள் முரளி, பாஸ்கர் மற்றும் காவலர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்பு கல்லூரியில் பேச்சு போட்டி கவிதை போட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பரிசுகளும் வழங்கப்பட்டது.