வடலூர் வாரச்சந்தையில், தற்காலிக ரோட்டோர கடைகள் அமைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
வடலூர் வாரச்சந்தையில், தற்காலிக ரோட்டோர கடைகள் அமைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதிகளில் வாரம்தோறும் சனிகிழமைகளில் வாரச்சந்தை இயங்கி வருவது வழக்கம்
இச்சந்தைக்கு விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்
மேலும் காய்கறிச் சந்தை மட்டுமல்லாது மாட்டுச் சந்தை ஆட்டுச் சந்தை கோழிச்சந்தை ஆகியவை வடலூர் பகுதிகளில் நடைபெறுகிறது
இந்நிலையில் கோழிச் சந்தையானது விருதாச்சலம் கடலூர் சாலையில் அதிகாலையில் நடைபெற்று வருகிறது கோழிச்சந்தை தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்து நின்று கொண்டு வியாபாரம் செய்வதால் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே வடலூர் போக்குவரத்து போலீசார் இதன் மீது கவனம் கூர்ந்து சாலையோரம் கடை அமைக்கும் வியாபாரிகளை சாலையை ஆக்கிரமிக்காமல் சற்று உள்ளடக்கியவாறு கடைகளை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.