வடலூரில் இன்று தருமச்சாலை, 157ம் ஆண்டு துவக்கவிழா சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது
வடலூரில் இன்று தருமச்சாலை, 157ம் ஆண்டு துவக்கவிழா சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது
கடலூர், மாவட்டம்,வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலையில் 157 ஆண்டு தொடக்க விழா நேற்று மே 25ந்தேதிவியாழக்கிழமை நடைபெற்றது,
இதனையொட்டி கடந்த ஏழு நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் மற்றும் அருட்பா முற்றோதலும் நடைபெற்றது, நேற்று முன்தினம்
புதன்கிழமை இரவு தருமச்சாலை மேடையில் திருவருட்பா இன்னிசை நாடகமும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது
நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஐந்துமணி முதல் பாராயணமும் 7:30 மணி அளவில் தருமச்சாலை சன்மார்க்கக் கொடி உயர்த்துதலும், காலை 9 மணி முதல் 11மணி வரை நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினர்களின் வில்லு பாட்டும், திருக்கோயிலூர் சீனிவாசன் திருஅருட்பாஇன்னிசை நிகழ்ச்சியும்11 மணி முதல் 12 மணி வரை ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரமும், பகல் 12 மணி முதல் தருமச்சாலை மேடையில், சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு, உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், முன்னிலையில்நடைபெற்றது இதில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் நந்தகோபால், உட்பட கலந்துக் கொண்டு பேசினார்கள்,காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஞானசபையிலும் தருமச்சாலையும் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடும் நடைப்பெற்றது, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலையம்செய்து இருந்தது,