தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கதவனி புதூரில் அமையவுள்ள சுங்கச்சாவடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில்,கதவனி புதூரில் அமையவுள்ள சுங்கச்சாவடியை எதிர்ப்பு தெரிவித்தும்,ஊத்தங்கரையில் அமைய உள்ள சுங்கச்சாவடிக்கு நிலம் கையகப்படுத்தி உரிய இழப்பீடு இதுவரை வழங்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கு முன்னுக்கு பின்னான முரண்பட்ட மதிப்பீட்டுத் தொகையை வழங்கி விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தமிழக அரசையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா சந்திப்பில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நெப்போலியன் தலைமையிலும், மருத்துவர் பவுன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் மாவட்ட பொருளாளர் மருத்துவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் நெப்போலியன் விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், அப்படி வழங்க தவறும் பட்சத்தில் ஒரு மாத காலத்தில் மீண்டும் ஆயிரம் பேரைத் திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்று கூறினார், இந்த நிகழ்ச்சியில் சுரேஷ்குமார் மாவட்ட தொழிற்சங்கம் ஆனந்தகிருஷ்ணன் சங்கர்,விக்னேஷ் ,கேப்டன் பிரபாகரன் ஆகியோர் உரை ஆற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்டத் துணை அமைப்பாளர் விமல்குமார் நன்றி உரை கூறினார். முன்னதாக ஊத்தங்கரை ரவுண்டானாவில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்,