Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

சித்தமருத்துவம்செய்திகள்

நெய்வேலி அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது

By tamilnewsmedia0
August 30, 2026 1 Min Read
0

டி.தனுஷ் (செய்தியாளர்)
குறிஞ்சிப்பாடி

நெய்வேலி அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது

உலகம் முழுவதும் காதலர் தினம் தந்தையர் தினம் நண்பர்கள் தினம் ஆகிய தினங்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வீட்டில் தினமும் சேவை செய்து வரும் மனைவிகள் கவுரவப்படுத்தும் விதமாக
வேதாந்திரி மகரிஷி மற்றும் அவரது துணைவியார் லோகாம்பாள் அவர்களும் இணைந்து 1994 ஆம் ஆண்டு மனைவி நல வேட்பு விழாவை தொடங்கி வைத்தனர் இந்நிலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சார்பில் மனைவி நல வேட்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது
உலக சமுதாய சேவா சங்க விரிவாக்க இயக்குனர் பேராசிரியர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற விழாவில் என்எல்சி இந்தியா மேலாளர் மணிவண்ணன் துணை மேலாளர்கள் குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரி மற்றும் கருங்குழி ஏரிஸ் கல்லூரி முதல்வர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகள் முதல் வயது முதிர்ந்த தம்பதிகள் வரை கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் பூமாலைகள் மாற்றிக் கொண்டனர் பின்னர் மனைவி கணவருக்கும் கணவர் மனைவிக்கும் கையில் காப்புக் அணிவித்துக் கொண்டு மனைவி நல வேட்பு விழா உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் இறுதியில் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரி உதவி பேராசிரியர் வில் விஜயன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

Next

நெய்வேலியில் விநாயகர் சதுர்த்தி விழா – பந்தல் கால் நடும் நிகழ்ச்சி

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme