செய்தியாளர் டி .தனுஷ்
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்று பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது.இதையொட்டி, ஆலய வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி விழா கமிட்டியினர், ஆலய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டனர்