அதுசரி, 30 ஆண்டு கொண்டாட்டம் என்பது புது ட்ரெண்ட் ஆகிவிட்டதோ
நம்ம ஊரில் எந்த திரைப்படம் ஓடும் எது ஓடாது என்று யாராலும் சொல்லமுடியாது.
எது நல்லபடம் எது மொக்கை என்பது ஒருவருக்கு ஒருவர் கண்ணோட்டத்திலும் மாறுபடும்.
சின்னத்தம்பி வந்த 12 ஏப்ரல் முதல் அதே மாதம் வந்த 9 படங்கள்:
என் ராசாவின் மனசிலே, அதிகாரி, கேப்டன் பிரபாகரன், எங்க ஊர் சிப்பாய், நாட்டை திருடாதே, பவுனு பவுனு தான், சாந்தி எனது சாந்தி, கற்பூர முல்லை
மே மாதம் 9, ஜூன் இல் 10, ஜுலையில் 6…அதன் பின் வந்த தளபதி குணா எல்லாம் விட்டுவிடுவோம். அந்த 4 மாதங்களில் மற்ற எவையுமே பெறாத மாபெரும்வெற்றி சின்னத்தம்பிக்கு கிடைத்தது.
ஏப்ரல் படம் என்றால் பொதுவாக பள்ளி கல்லூரிகளில் கோடை விடுமுறை தொடங்கிவிடும், வீட்டோடு படம் பார்க்க கூட்டம் வரும். நெட்பிளிக்ஸ், cd, செல், டேப்லெட் எல்லாம் இல்லை, மக்கள் போய்த்தான் பார்ப்பார்கள். வீடியோ காஸட் சிலர் பார்ப்பார்கள். வாடகைக்கு vcr செட் கிடைக்கும். பாதி அநேகமாக சிக்கும் இல்லை நின்றுநின்று ஓடும்… தியேட்டர் சென்று பார்ப்பதையே பெருவாரியான மக்கள் விரும்பினார்கள்.
A, B, C என மூன்று சென்டரையும் ஒரு படம் கவர்வது சிரமம், கதை, நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், வசனம் தாண்டி ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பத்திரிக்கை விமர்சனங்கள் (ஹிந்துவில் கூட வரும்),.. எது தூக்கி நிறுத்தும் என்றே சொல்லமுடியாது. மக்களின் ஏற்பு வினோதமானது. லக் என்ற ஒரு வார்த்தையில் பல கோடிகள், எண்ணற்ற மக்களின் உழைப்பு அடங்கியிருக்கும் திரை உலகம் விந்தைகள் நிறைந்தது.
படத்துக்கு பூஜை போட்ட நாளில் ஏதோ தெய்வ சங்கல்பம் சரியாக அமைந்திருக்கும். ராசி என்று கூட சொல்லலாம்.
தாலி என்ற ஒரு மொக்கை செண்டிமெண்ட், அண்ணன்கள் ஒப்புக்கொள்ளாத சம்பந்தமே இல்லாத காதல் கடைசியில் கை கூடியதா என்ற ஒன் லைனர் தாண்டி அதன் கதையில் என்ன பெரிசாக இருந்தது என எனக்குப் புரியவில்லை…பிரபு குஷ்பூ திரை தாண்டி பேசப்பட்டார்கள். தங்களால் முடிந்தவரை சிறப்பாக செய்திருந்தார்கள். மனோரமா மிகச்சிறந்த நடிகை என இன்னொரு முறை நிரூபித்திருந்தார். அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் பார்க்கவே கண்றாவியாக இருந்தன. ஒரு லாஜிக்குமே இல்லாவிட்டாலும் ஒப்புக்கொண்டு விட்டோமே என்று அதை ஏற்று நடத்த ஒரு தில் வேண்டும். ஆச்சி அதை சிறப்பாக செய்திருந்தார். ராதாரவிக்கும் அவரது ரோல் எடுத்தது. மற்றபடி ராஜா இசை தான் டாப். ஸ்வர்ணலதா வின் போவோமா ஊர்கோலம் இன்றும் கேட்க இனிமையாக இருக்கிறது. தூளியிலே யும் அப்படித்தான்.
நிறைய படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனாலும் சில மட்டும் மிகப்பெரிய காரணம் இல்லாவிட்டாலும் வெற்றியைத் தொடும் என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டது.
அதுசரி, 30 ஆண்டு கொண்டாட்டம் என்பது புது ட்ரெண்ட் ஆகிவிட்டதோ,…